உதகை ரோஜா கண்காட்சியை முன்னிட்டு 30,000 செடிகளை தயார் செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள்

நீலகிரி : உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நடக்கும் 17-வது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் செடிகளை தயார் செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


நீலகிரி : உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நடக்கும் 17-வது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் செடிகளை தயார் செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இந்த சீசன் காலங்களின் போது, வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை தருவார்கள்.



இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க, உதகை மலர் கண்காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக தொடங்கப்பட்ட ரோஜா பூங்காவில், ஆண்டுதோறும் மலர் கண்காட்சி தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், இந்தாண்டு கோடை சீசனுக்காக தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காவிலும் மலர் நாற்றுகள் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நூற்றாண்டு உதகை ரோஜா பூங்காவில் கோடை சீசனுக்காக ரோஜா செடிகளை கவாத்து செய்து தயார் செய்யும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரோஜா ரகங்களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...