கோவை : 2019?ம் ஆண்டிற்கான சிறந்த காவல்நிலையத்திற்கான விருதைப் பெறும் வகையில், கோவை மாநகரில் உள்ள சி-2 பந்தய சாலை காவல் நிலையமும், போத்தனூர் டி-3 காவல் நிலையமும் தயாராகி வருகின்றன.
கோவை : 2019?ம் ஆண்டிற்கான சிறந்த காவல்நிலையத்திற்கான விருதைப் பெறும் வகையில், கோவை மாநகரில் உள்ள சி-2 பந்தய சாலை காவல் நிலையமும், போத்தனூர் டி-3 காவல் நிலையமும் தயாராகி வருகின்றன.

மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் நாட்டில் சிறந்த 10 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கு விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு சிறந்த காவல்நிலையங்களில் ஒன்றாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 2019-ம் ஆண்டிற்கான விருதுகள் பெற கோவை மாநகரில் உள்ள சி-2 பந்தய சாலை காவல் நிலையமும், போத்தனூர் டி-3 காவல் நிலையமும் தயாராகி வருகின்றன.

இதில், சி-2 காவல் நிலையத்தில் புகார் தர வரும் பொதுமக்களை வரவேற்கும் வகையில், வரவேற்பறையில் இருந்து சுத்திகரித்த குடிநீர், குழந்தைகள் விளையாடும் வகையில் காப்பகம், தாய்மார்களுக்குப் பாலூட்டும் அறை, காவலர்களுக்கு ஓய்வரை, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனி, தனி லாக்கப், குற்றப் பதிவேடுகளை காக்கும் அரை என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, போத்தனூர் காவல்நிலையத்திலும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த காவல் நிலையத்தில், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காவல் நிலையத்தில் அமைந்துள்ள சிறு நூலகம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.