திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பொதுமக்களின் சரமாரியான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் உதயநிதி ஸ்டாலின் திணறினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக, பொதுமக்களுக்கு அடுத்தடுத்து கேள்விகளை கேட்கத் தொடங்கினர். இதனால், அவற்றிற்கு பதில் அளிக்க முடியாமல், உதயநிதி ஸ்டாலின் திணறினார். இது மேடையில் இருந்த தி.மு.க., நிர்வாகிகளிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கிராம சபைக் கூட்டத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட நிலத்தை தி.மு.க. பொறுப்பாளரே பறித்துக் கொண்டதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், தி.மு.க. ஆட்சி காலத்தில் தங்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.