கோவை : 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்குமாறு கோவை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை : 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்குமாறு கோவை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் மனு அளிக்கப்பட்டது.

பழைய ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர்களுக்கான 21 மாத நிலுவைத் தொகை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு போராட்டங்கள், கைது நடவடிக்கைகள் என 9 நாட்களுக்குப் பிறகு வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனிடையே, அரசின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 4,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்குமாறு கோவை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் மனு அளித்துள்ளார்.
போராட்டம் நடத்தியதால், காவல்துறையினர் மூலமாக வழக்கு தொடரப்பட்டு, தற்காடிலக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை, 25-ம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் மீது தமிழ்நாடு குடிமைப்பணி - ஒழுங்கு மற்றும் மேல்முறையீட்டு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை, 9 நாட்கள் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அளிக்குமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.