கோவை : சின்னதம்பி யானையைக் கூண்டில் அடைத்து கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.
கோவை : சின்னதம்பி யானையைக் கூண்டில் அடைத்து கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து, தேசிய அளவிலான சூழியல் மாநாடு நேற்று தொடங்கியது. 2 -வது நாளான இன்று கஜ யாத்ரா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறும் போது, ஓசூரில் புகுந்த காட்டு யானையைப் பிடிப்பதற்கு இதே முறையைத் தான் பயன்படுத்தினோம். தற்போது அந்த யானை வனப்பகுதிக்குள் உள்ளது. ஆனால், சின்னத்தம்பி முற்றிலும் மாறுபட்டது. இந்த யானையைக் கூண்டில் அடைத்து கும்கி யானையாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
மேலும், இந்தக் கருத்தரங்கை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் எஸ்.பி.வேலுமணி இணைந்து தொடங்கி வைத்தனர். இதில், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் யானைகளைப் பற்றிய அறியலின் நாடகத்தை அரங்கேற்றினர்.