கோவையில் சட்டவிரோதமாக போதை மாத்திரை விற்பனை செய்த வெவ்வேறு மருந்துக் கடை உரிமையாளர்கள் 2 கைது

கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரை விற்பனை செய்த மருந்துக் கடை உரிமையாளர்கள் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரை விற்பனை செய்த மருந்துக் கடை உரிமையாளர்கள் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோவையில் கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்குப் போதை பொருட்கள் கிடைப்பதை தடுக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐ.பி.எஸ் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் சட்டம் - ஒழுங்கு எல்.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவையில் கஞ்சா, போதை மாத்திரை போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஒழிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இதையடுத்து, தனிப்படை போலீசார் கல்லூரிகளை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, குனியமுத்தூரில் உள்ள ஒரு மருந்துக் கடையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குப் போதை தரும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக குனியமுத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் அந்த மருந்துக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில், அங்கு போதை தரக்கூடிய நைட்ரஸ்சீபம் என்ற மாத்திரை விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, குனியமுத்தூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த மருந்துக் கடை உரிமையாளர் மதன் (42), என்பவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அந்த மருந்துக் கடையில் இருந்து 70 போதை தரும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதேபோலவே, சரவணம்பட்டி வெங்கடேஷ் நகர் பகுதியில் உள்ள ஒரு மருந்துக் கடையில் சோதனை நடத்தியதில் 10 ஆயிரம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, மருந்துக்கடை உரிமையாளர் சுப்பிரமணியம் (52), என்பவர் கைது செய்யப்பட்டார். மனநோயாளிகளுக்குத் தூக்கத்துக்கு பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகளை மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளில் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். 

இருப்பினும், சில மருந்துக் கடைகளில் மருந்துக் கடை உரிமையாளர்கள் பணத்திற்காக இந்த மாத்திரைகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக, 10 மாத்திரைகள் 32 ரூபாய் இருக்கும் என்றால் இவர்கள் ரூ.500 முதல் ரூ.600 வரையிலும் விற்பனை செய்து வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...