கோவையில் கோழிக்கடை உரிமையாளரைக் கொன்ற ஒரிசா இளைஞர் கைது

கோவை : அன்னூரை சேர்ந்த கோழிக்கடை உரிமையாளரை ஒரிசாவை சேர்ந்தவர் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை : அன்னூரை சேர்ந்த கோழிக்கடை உரிமையாளரை ஒரிசாவை சேர்ந்தவர் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம், அன்னூர் கணேசபுரத்தை சேர்ந்தவர் சிவசாமி(47). இவர் அதே பகுதியில் கோழி கடை நடத்தி வருகிறார். இன்று வீட்டருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஒரு இளைஞர், திடீரென சிவசாமி வீட்டுக்குள் நுழைய முயன்றார். இதைப் பார்த்த அவர், அந்த நபரைச் சத்தம் போட்டு திருப்பி அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, அந்த நபர், அருகேயிருந்த தென்னை மட்டையை எடுத்து சிவசாமியின் பின்புற தலையில் சரமாரியாக அடித்தார். இதில் மயங்கிய அவரை, அருகேயிருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதற்கிடையே சிவசாமியை தாக்கிய நபரை, அக்கம் பக்கத்தினர் பிடித்து அன்னூர் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் ஒரிசாவைச் சேர்ந்த மனோஜ்யாக்ரா (35), எனத் தெரியவந்தது. மனோஜ் யாக்ரா மீது கொலை வழக்குப்பதிந்து அன்னூர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...