மீண்டும் ஊருக்குள் புகுந்த சின்னத்தம்பி : காட்டுக்குள் அனுப்ப போராடும் வனத்துறையினர்

கோவை : பயிர் சேதம் விளைவித்ததாகக் கூறி ஆனைமலைக்கு அனுப்பப்பட்ட காட்டுயானை சின்னத்தம்பி அங்கலக்குறிச்சிக்குள் நுழைந்துள்ளது.


கோவை : பயிர் சேதம் விளைவித்ததாகக் கூறி ஆனைமலைக்கு அனுப்பப்பட்ட காட்டுயானை சின்னத்தம்பி அங்கலக்குறிச்சிக்குள் நுழைந்துள்ளது. 

தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சின்னதம்பி, விநாயகன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைக்குப் பின்னர், கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விநாயகன் யானை, முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.



 

இந்நிலையில், கோவை தடாகம் பகுதியில் இருந்து கடந்த 25 -ம் தேதி சின்னத்தம்பி கும்கி யானைகளின் உதவியோடு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. அங்கிருந்து, லாரி மூலமாக ஆனைமலை, வரகளியாறு வனப்பகுதிக்குள் சின்னத்தம்பி விடப்பட்டது. 

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக சின்னத்தம்பி தற்போது அருகிலிருக்கும் அங்கலக்குறிச்சி எனும் ஊருக்குள் புகுந்துள்ளது. இதையடுத்து, அதனை மீண்டும் காட்டுக்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...