கோவை : உக்கடம் அருகே உள்ள கெம்பட்டி காலனி பகுதியில் கல்லூரி மாணவரை மர்ம நபர்கள் சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, உக்கடம் அருகே உள்ள கெம்பட்டிகாலனி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் முரளிதரன் (21). இவர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்.சி., (ஐ டி) படித்து வருகிறார். நேற்று இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு குழுவினர் அவரைக் கல்லால் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலை சுதாரித்துக் கொண்ட மாணவர் முரளிதரன் தப்பி ஓடும் பொழுது மறைந்திருந்த நபர்கள் மார்பில் நெஞ்சு பகுதியிலும், உடம்பின் பல்வேறு பகுதியிலும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில், முரளிதரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தச் சம்பவம் தொடர்பாக பாலாஜி என்பவரை போலீசார் விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இரு தரப்பினர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அடிதடியை முரளிதரன் தடுத்து வைத்துள்ளதாகவும் தெரியவந்ததுள்ளது. இந்த முன் விரோதத்தால் முரளிதரன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெரியகடைவீதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.