ஜாக்டோ - ஜியோவிற்கு ஆதரவு : திருப்பூர் அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பட்டயம் அணிந்து போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பட்டயம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பட்டயம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் ஜாக்டோ - ஜியோ அரசு அமைப்பினர் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்களை காவல்துறையினர் கைது செய்ததைக் கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பட்டயம் அணிந்து போராட்டம் நடத்தினர். 



திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வரும் 120 செவிலியர்கள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில், பணியில் விடுப்பு இல்லாமல் இன்று முதல் 3 நாட்களுக்கு கருப்பு பட்டயம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...