நீலகிரி : உதகையில் மே மாதம் நடைபெறவுள்ள ரோஜா கண்காட்சிக்காக 4,201 வகையான ரோஜாக்கள் நடவு செய்யப்படவுள்ள நிலையில், இதற்கான கவாத்து பணிகள் இன்று தொடங்கப்பட்டது.

ஆண்டுதோறும் கோடை சீசனுக்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், பூங்காக்களில் புதுவகையான முயற்சிகளை தோட்டக்கலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதில், உதகையில் உள்ள ரோஜா பூங்காவில் 3,000 வகையான ரோஜா வகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் ரோஜா வகைகளை காண லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இங்கு மே மாதம் நடக்கும் ரோஜா கண்காட்சியில், ரோஜா மலர்களைக் கொண்டு நாட்டின் பல்வேறு சிறப்பம்சங்கள் வடிவமைக்கப்படும். இதை சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பு மக்களும் கண்டு ரசிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை ஏற்பாடு செய்து வருகிறது.
இதனிடையே, இந்தாண்டு சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு ரோஜா ரகங்கள் வைத்துள்ள போதிலும், நவீன நீலகிரியை உருவாக்கிய ஜான்சல்லீவன் பெயரில் உருவாக்கப்பட்டு வரும் ரோஜாக்கள், சுற்றுலாப் பயணிகளிடையே அதிக வரவேற்பை பெரும் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.