தொண்டாமுத்தூர், ஆலந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விநியோகம்

கோவை : தொண்டாமுத்தூர் மற்றும் ஆலந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 870 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் (பொ) துரை.இரவிசந்திரன்வழங்கினார்.

கோவை : தொண்டாமுத்தூர் மற்றும் ஆலந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 870 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் (பொ) துரை.இரவிசந்திரன்வழங்கினார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலந்துறை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இன்று தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் (பொ) .துரை.இரவிசந்திரன் 870 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.



பின்னர், மாவட்ட ஆட்சியர் (பொ) துரை.இரவிசந்திரன் தெரிவித்ததாவது :- அனைத்து மாணவ, மாணவியர்களும்  அரசின் திட்டங்களை பெற்றுப் பயன்பெறுவதுடன் நன்றாகப் படித்து தேர்வுகளில், மாநில அளவில் உயர்ந்த மதிப்பெண் பெற்றிடவும், உயர்கல்வி வரை படித்து உயர்ந்த பதவிகளை பெறவேண்டும், எனக் கூறினார். 

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் சுரேஷ், வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...