கோவை : தொண்டாமுத்தூர் மற்றும் ஆலந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 870 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் (பொ) துரை.இரவிசந்திரன்வழங்கினார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலந்துறை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இன்று தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் (பொ) .துரை.இரவிசந்திரன் 870 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் (பொ) துரை.இரவிசந்திரன் தெரிவித்ததாவது :- அனைத்து மாணவ, மாணவியர்களும் அரசின் திட்டங்களை பெற்றுப் பயன்பெறுவதுடன் நன்றாகப் படித்து தேர்வுகளில், மாநில அளவில் உயர்ந்த மதிப்பெண் பெற்றிடவும், உயர்கல்வி வரை படித்து உயர்ந்த பதவிகளை பெறவேண்டும், எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் சுரேஷ், வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.