கோவை : உதகையில் நாளை நடைபெறவிருக்கும் கருத்தரங்கை முன்னிட்டு கோவை வருகை புரிந்த தமிழக ஆளுநரைக் கோவை மாவட்ட ஆட்சியர் (பொ) வரவேற்றார்.
கோவை : உதகையில் நாளை நடைபெறவிருக்கும் கருத்தரங்கை முன்னிட்டு கோவை வருகை புரிந்த தமிழக ஆளுநரைக் கோவை மாவட்ட ஆட்சியர் (பொ) வரவேற்றார்.
விவசாயிகளுக்குச் சாதகமான மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்த இந்திய மண் வள பாதுகாப்பு சங்கத்தின் 28 -வது தேசிய கருத்தரங்கு முதன்முறையாக உதகையில் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இக்கருத்தரங்கை வரும் 31-ம் தேதி உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கவிருக்கிறார்.
நாளை நடைபெறும் இந்த கருந்தரங்கை முன்னிட்டு, இன்று ஆளுநர் கோவை வருகை புரிந்துள்ளார். அவரைக் கோவை மாவட்ட ஆட்சியர் (பொ) துரை.ரவிச்சந்திரன் வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் உதகைக்கு சென்ற ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித், கோத்தர் மற்றும் தோடர் பழங்குடியின மக்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோரும் உடனிருந்தனர்.
