மின்சார வேலியின் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்த வழக்கு : 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை தண்டனை விதிப்பு

கோவை : விவசாயத் தோட்டத்தில் போடப்பட்ட மின்சாரவேலியின் மின்சாரம் தாக்கியதால் காட்டு யானை உயிரிழந்த வழக்கில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை : விவசாயத் தோட்டத்தில் போடப்பட்ட மின்சாரவேலியின் மின்சாரம் தாக்கியதால் காட்டு யானை உயிரிழந்த வழக்கில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பெரியநாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட தனது பட்டா நிலத்தில், கே. ராஜு என்பவர் மின்சார வேலி அமைத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி அந்த வழியாக வந்த காட்டு யானை ஒன்று, அந்த மின்சார வேலியை தொட முயன்ற போது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், போதிய ஆதாரங்களை திரட்டி கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த வழக்கில், 3 ஆண்டுகள் சிறை தண்டனைன விதித்து கடந்த 2014-ம் ஆண்டு நீதிபதி உத்தரவிட்டார். 

இந்த தீர்ப்பை எதிர்த்து கே. ராஜு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, விவசாயிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தனர். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர். 

இந்த தீர்ப்பை வரவேற்ற வனஆர்வலர்கள் மற்றும் இயற்கை அமைப்பினர், வனத்துறையினருக்குப் பாராட்டு தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற தீர்ப்பு, வரும் காலத்தில் விலங்குகளின் உயிருக்கு ஆபத்தான மின்சார வேலிகளை அமைக்கும் விவசாயிகளுக்கு ஒருபாடமாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...