கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு 9-வது நாளாக அரசு ஊழியர்கள் போராட்டம்

கோவை : 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 9-வது நாளாக தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை : 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 9-வது நாளாக தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகம் முழுவதும் 21 மாத ஊதிய நிலுவை மற்றும் பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 21-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு கடுமையான நிபந்தனைகளை தமிழக அரசு விதித்ததால், 95 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் இன்றைக்குப் பணிக்கு திரும்பியுள்ளனர். 

இந்த நிலையில், 9-வது நாளாக அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசிற்கு எதிராகக் கண்டன கோசங்களை எழுப்பினர். மேலும், இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, மாவட்ட நீதிபதிகள் ஆகியோர் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை பெற்றுக்கொண்டு, ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார். இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...