திருப்பூர் : காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளைக் கூறிவருவதாகவும், ராகுல், பிரியங்கா என யார் வந்தாலும் மோடியை அசைக்க முடியாது எனவும் திருப்பூரில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில், பிப்ரவரி 10 -ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் மோடி பங்கேற்று பேசவுள்ளார். இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்திற்கான கால்கோள் விழா திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள வாஜ்பாய் திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர், கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது ;- மோடியின் ஆட்சி வளர்ச்சியின் ஆட்சி. தற்போது, வாக்குச் சாவடி அளவிற்கு பலம் பொருந்தியவர்களாக மாறி வருகிறோம். அதனால் தான் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கருத்தை வலியுறுத்துகிறோம். நான்கரை ஆண்டுகளில் மோடியின் சாதனை அளப்பரியது. பொய்வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கி வருகிறது. ராகுல், பிரியங்கா என யார் வந்தாலும் மோடியை அசைக்க முடியாது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மத்திய அமைச்சரவை ரூ.1300 கோடி ஒதுக்கியுள்ளது. 48 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் இயங்கும். ஸ்டாலின் நிலை தடுமாறி பேசுகிறார். ஆறுமுக சாமி ஆணையத்தில் மோடியை விசாரிக்கச் சொல்கிறார். எதைப் பேசுகிறோம் என்று ஸ்டாலினுக்கு தெரியவில்லை. வரம்பு மீறிப் பேசி வருகிறார். அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இன்றைய சூழலில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதே நல்லது. எதிர்க்கட்சிகள் மாற்றுச் சக்திகளை போராடத் தூண்டப்படக்கூடாது. போராடுபவர்கள் தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொள்ள வேண்டும். திருநாவுக்கரசர் நப்பாசையில் உள்ளார்.
நாங்கள் விட்டுக் கொடுத்து வாங்கும் நிலமையில் தான் காங்கிரஸ் கட்சி உள்ளது. பிரதமர் வேட்பாளர் பலம் பொருந்தியவர். கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்க வில்லை. அதற்குள்ளாக, சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள், இவ்வாறு அவர் பேசினார்.