திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட இடத்தை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் ஆய்வு

திருப்பூர் : திருப்பூரில் வரும் பிப்., 10 -ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

திருப்பூர் : திருப்பூரில் வரும் பிப்., 10 -ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். 

பிப்ரவரி 10 -ம் தேதி திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் பாஜக சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். அந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியின் போது மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில துணைப்பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது :- மதுரை பொதுக்கூட்டத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக கூட்டம் வந்தது. அதேபோல், திருப்பூர் பொதுக்கூட்டத்திற்கும் குறைந்தபட்சம் 2 லட்சம் பேர் கூடுவர். பாண்டி மண்டலத்தில் ஏற்பட்ட எழுச்சிபோலவே கொங்குமண்டலத்திலும் ஏற்படும், என்றார். 



இதனிடையே, மேலும், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்த மத்திய அரசின் மீதான குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, "நானும் அண்ணன் தம்பிதுரையும் தனியாகப் பேசிக்கொள்ளும்போது பல விசயங்களை யோசித்திருக்கிறோம். அதனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, என பதிலளித்தார். 

இதற்கடுத்தாக, பிரதமர் மோடிக்கு முன்னதாக அன்புமணி ராமதாஸ் அவர்கள் அடிக்கல் நாட்டியதாகச் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படம் குறித்து கேட்கையில், "தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழ்நிலையில் இதுகுறித்து கவலைப்படவேண்டியதில்லை." என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...