நீலகிரி : ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உதகை சேரிங் கிராஸ் பகுதியில் இன்றும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 151 பெண்கள் உட்பட 300 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழ்நாடுஆசிரியர், அரசுஊழியர், அரசுப்பணியாளர் இயக்கங்களின் கூட்டமைப்பு நடவடிக்கை குழு சார்பில் தமிழக அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளான புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அரசுஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத நிலுவை தொகையை ஜனவரி 2016 முதல்வழங்கவேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்பத் தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு கால முறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உதகை ஏடிசி பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. பகல்1 மணி முதல் 2 மணி வரை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் வழிகளான தொட்டபெட்டா, தாவரவியல்பூங்கா ஆகிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போது பெண் அலுவலர்களைக் காவல் அதிகாரி தரக்குறைவாக பேசியதாகக் கூறி ஜேக்டோ ஜியோ அமைப்பினர் அந்த காவல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. அதன்பின் சமாதானம் செய்யப்பட்ட ஜேக்டோ ஜியோ அமைப்பினரைக் காவல் துறையினர் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இதன் காரணமாக, வெகு நேரம் சாலையில் காத்திருந்தனர்.