கோவை : மாணவர்கள் பாதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட ஆர்.2017 என்ற தேர்வு முறையை மாற்றக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் அண்ணா பல்கலைக்கழக தலைவரிடம் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகிள் உள்ளன. இங்கு லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது, அந்த மாணவர்கள் பாதிப்படையும் வகையில், அண்ணா பல்கலைக்கழகம் ஆர்.2017 என்ற தேர்வு முறையைக் கொண்டு வந்துள்ளது. மேலும், பல பொறியியல் கல்லூரிகளில் பி.இ., எம்.இ., எம்.பி.ஏ. படித்த ஆசிரியர்களை வைத்தே பாடம் நடத்தி வருகின்றனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் இத்தகைய தேர்வு முறையை நடைமுறைப்படுத்தினால், கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். எனவே, தேர்வில் புதியதாக அமல்படுத்திய முறைகளை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளனர்.