முதலை உலா வருவதால் மாயாற்றில் குளிக்கத் தடை

நீலகிரி : முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஓடும் மாயாற்றில் முதலை உலா வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்


நீலகிரி : முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஓடும் மாயாற்றில் முதலை உலா வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பக வனத்தின் மத்தியில் மாயாறு செல்கிறது. மாயாற்றில் ‘மக்கர் குரோக்கடைல்’ எனப்படும் ஆற்று நீர் முதலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நீலகிரியில் உள்ள சீரான தட்பவெப்ப நிலைக்கு இவை வாழும் தன்மை கொண்டதால், இவ்வகை முதலைகள் மாயாற்றில் காணப்படுகின்றன. தற்போது, வெயிலான காலநிலை இப்பகுதியில் நிலவுவதால், மாயாற்றின் கரையோர பகுதிகளில் உள்ள பாறைகளில் இவற்றைக் காண முடிகிறது. 

முதலை நடமாட்டம் இருப்பதால், மாயாற்று பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...