ஆனைகட்டி அருகே யானை தாக்கியதில் குடிபோதையில் இருந்தவர் உயிரிழப்பு

கோவை : ஆனைகட்டி அருகே யானை தாக்கியதில் குடிபோதையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை : ஆனைகட்டி அருகே யானை தாக்கியதில் குடிபோதையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கனிவழி பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் பி. முருகன் (40). இவர் மதுபானம் மற்றும் கஞ்சாப் பொருட்களை உட்கொண்டுவிட்டு, நேற்றிரவு தனது மனைவியின் சொந்த ஊரான பனப்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த காட்டு யானை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் ஆனைக்கட்டியில் உள்ள நகமாரா ஓடையின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக, முருகனின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதேபோல, தடாகம் பகுதியில் பிரச்சனைக்குரிய யானைகள் எனக் கருதப்பட்ட விநாயகன், சின்னத்தம்பி ஆகியவற்றை இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், பூச்சியூர் அருகே நேற்றிரவு 2 பேர் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்தனர். ஹைடெக் சிட்டி வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, செந்தில்குமார் (41), மனோஜ் கார்த்திக் (31) ஆகியோர் ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...