கோவை : தமிழக - கேரள எல்லைக்கும் இடைப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயை, கடும் போராட்டத்திற்குப் பின் வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து போராடி அணைத்தனர்.
கோவை : தமிழக - கேரள எல்லைக்கும் இடைப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயை, கடும் போராட்டத்திற்குப் பின் வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து போராடி அணைத்தனர்.

போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தேவராயபுரம் வனப்பகுதியில் திடீரென நேற்றிரவு காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ கேரளா வனத்திற்குட்பட்ட தங்கல் என்ற இடத்தில் இருந்து தமிழக வனப்பகுதியில் வேகமாகப் பரவியது. இது குறித்து கேரளா வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், போளுவாம்பட்டி ரேஞ்சரின் உத்தரவின் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மலைவாழ் மக்கள் உதவியுடன் சுமார் 5 மணிநேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இதனால், பல ஏக்கர் பரப்பளவில் காடு எரிந்து நாசமானது. நள்ளிரவு என்பதால் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வனத்துறையினர் பெரும் போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர்.