கோவை : கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மூலிகை வனம் உருவாக்கிடும் முன்னேற்பாடு 102 -வது வாரக் களப்பணி இன்று நடைபெற்றது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோவையில் உள்ள குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுக்கள் போன்றவற்றை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, மூலிகை வனம் அமைக்கத் தேவையான ஆயத்த பணிகள் இன்று நடைபெற்றது. இன்று காலை வெள்ளலூர் குளத்தில் நடைபெற்ற 103 -வது வாரக் களப்பணியில் 40 -க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் களப்பணியில், பனைத் திணைத் திருவிழாவிற்காக சுமார் 40 ஆயிரம் பனை விதைகள் சேகரித்து உதவிய கருப்பம்புலம் கிராமம் கஜா புயலால் பாதிப்படைந்ததற்கு நமது கோவையின் சார்பில் உதவிகள் அளிக்கப்பட்டது. கருப்பம்புலம் மக்கள் அளித்த விலை மதிப்பில்லா அன்புப் பரிசுகளான 3000 பனங்கிழங்குகள், புடலங்காய், சுரைக்காய் மற்றும் அரசாணிக்காய் தன்னார்வலர்களுக்கு அன்போடு வழங்கப்பட்டது.