கோவையில் கொள்ளையில் ஈடுபட முயன்ற இருவரைத் தனிநபராக மடக்கிப் பிடித்த போலீசுக்கு குவியும் பாராட்டுகள்

கோவை : ஒண்டிபுதூர் மேம்பாலத்தின் கீழே கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற இரண்டு திருடர்களை தனிநபராக போலீசார் ஒருவர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.


கோவை : ஒண்டிபுதூர் மேம்பாலத்தின் கீழே கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற இரண்டு திருடர்களை தனிநபராக போலீசார் ஒருவர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது. 

கோவை மாநகரில் பெருகிவரும் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன்படி, கோவை மாநகரில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் பேட்ரோல் வாகனங்கள் மூலம் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குற்ற சம்பவங்களை முன்னமே தடுக்க மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐபிஎஸ் மற்றும் துணை ஆணையாளர் சட்டம் ஒழுங்கு டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், இரவு முழுவதும் போலீசார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

இதையடுத்து, இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் ஒண்டிபுதூர் மேம்பாலம் அருகே கொள்ளையர்கள் இருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் முன்பே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமாரின் மகன் மதன்குமார் (22), கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமாரின் மகன் செந்தில் பிரபு (38), ஆகிய இருவரும் ஸ்பேனர்கள், இரும்பு ராடுகள் போன்ற ஆயுதங்களுடன் ஒண்டிபுதூர் மேம்பாலத்தின் கீழே உள்ள கடைகளை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் நின்று கொண்டிருந்தனர். 



அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் இருந்த சிங்காநல்லூர் காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு காவலர் சுகுமார் என்பவர் இருவரையும் விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனிடையே, இருவரையும் சோதனை செய்யும் பொழுது அவர்கள் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், விடாப்பிடியாக காவலர் சுகுமார் இருவரையும் மடக்கிப் பிடித்து காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். 

அதன் பின்னர் தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே, ஒண்டிபுதூர் மேம்பாலத்தின் கீழே உள்ள கடைகளில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், அதே மேம்பாலத்தின் கீழ் மீண்டும் கொள்ளை முயற்சிகள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. ஆகையால், இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் குற்றவாளிகளுக்கும் தற்போது கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் நடப்பதற்கு முன்பாகவே காவலர் ஒருவர் தனியாக ரோந்து பணியின்போது குற்றவாளிகளை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ள சம்பவம் சிங்காநல்லூர் பகுதியிலுள்ள பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 



இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறும் போது, தங்கள் உயிரைப் பொருட்டாக எண்ணாமல் பொதுமக்களை பாதுகாக்கும் காவலர்களை உயரதிகாரிகள் ஊக்கப்படுத்தும் போது காவலர்கள் தொடர்ந்து திறம்பட செயல்படுவார்கள், என்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...