திருப்பூர் : திருப்பூரில், 16 -வது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்காக நடைபெற்ற கலை இலக்கியப்போட்டிகளில் 1000 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் : திருப்பூரில், 16 -வது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்காக நடைபெற்ற கலை இலக்கியப்போட்டிகளில் 1000 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து 16 -வது புத்தகத் திருவிழா இம்மாதம் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 10 -ம் தேதி வரை திருப்பூரில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, மாணவ மாணவிகளுக்கான கலை இலக்கியப்போட்டிகள் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி மற்றும் பல்லடம் உள்ளிட்ட 4 மையங்களில் நடைபெற்றது.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 1000 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை உள்ளிட்ட போட்டிகளில் பங்குபெற்றனர். இப்போட்டியில், வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பிப்ரவரி 6 -ம் தேதி புத்தகத் திருவிழாவின் போது பரிசுகள் வழங்கப்படவுள்ளன.