கோவை : மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு ம.தி.மு.க., சார்பில் கருப்பு காட்டும் போராட்டம் நடத்தப்படுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ம.தி.மு.க., அலுவலகத்தில் வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- நாளை மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு ம.தி.மு.க., சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை ம.தி.மு.க., எதிர்க்கவில்லை. ஆனால், மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டப்படும். மேலும், நஞ்சு வைத்த உணவில் தேன் வைப்பது போல, மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கிறது.
முல்லைப் பெரியாறு, மேகதாது அணை, நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்தத் திட்டங்களினால் பொருளாதாரம் உயரும் என்றாலும், தமிழகம் அழிந்து விடும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையாக வாதாடவில்லை. தனது வாதத்தினால்தான் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளிக்கவில்லை, எனக் கூறினார்.