பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் உதகையில் 70-வது குடியரசு தினவிழாக் கொண்டாட்டம்

நீலகிரி : நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியை ஏற்றினார்.

நீலகிரி : நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியை ஏற்றினார். 



நாடு முழுவதும் இன்று 70-வது குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியேற்றி, காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் ரூ. 29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர், காவல்துறை, தீயணைப்பத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து, மண்ணின் மைந்தர்கள் என்றழைக்கப்படும் தோடர், கோத்தர், இருளர் ஆகியோர்களின் பாரம்பரிய இசை நடனம், சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

குறிப்பாக, அனைத்து மாவட்டங்களிலும் காலை 8.00 மணிக்கு தேசிய கொடியேற்றுவது வழக்கம். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் குளிர் அதிகரித்து காணப்படுவதைத் தொடர்ந்து, காலை 10.00 மணிக்குத் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு, சுமார் 4 மணிநேரம் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...