திருப்பூர் : திருப்பூரில் தொடர்ந்து 8 மணிநேரம் ஓவியங்கள் வரையும் 14 வயது சிறுமியின் சாதனை முயற்சிக்கு பாராட்டுயை மேற்கொண்டு வருகிறார்.
திருப்பூர் : திருப்பூரில் தொடர்ந்து 8 மணிநேரம் ஓவியங்கள் வரையும் 14 வயது சிறுமியின் சாதனை முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருப்பூரில் 'பியான்ட் டே புக்ஸ்' எனும் அமைப்பு ஆண்டுதோறும் ஜூனியர் பிகாசோ என்ற ஓவியம் வரையும் போட்டிகளை நடத்தி வருகிறது. 3-வது ஆண்டாக திருப்பூர் வளையங்காடு பகுதியில் தனியார் மண்டபத்தில் இந்த ஓவியப் போட்டியில் நடைபெற்றது. இதில், ஜான்வி காந்தி என்ற 14 வயது சிறுமி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தொடர்ந்து 8 மணிநேரம் ஓவியங்கள் வரையும் சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

கார்டூன் ஓவியங்கள், 2டி ஓவியங்கள், டூடுல் ஓவியங்கள், மாடர்ன் ஓவியங்கள் என ஒவ்வொரு ஓவியத்திற்கும், சுமார் 3 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்கள் வரை 70 முதல் 100 ஓவியங்கள் வரைய திட்டமிடப்பட்டுள்ளது. ஓவியங்கள் அனைத்தும் பென்சில், வாட்டர் கலர், மெழுகு வண்ணங்கள், கரி வண்ணங்கள், அக்ரெலிக் வண்ணங்கள் கொண்டு வரையப்படுகிறது. ஓவியம் வரையும் வீடியோ பதிவுகளை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட், வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட் பதிவுக்கு அனுப்பப்படும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த அரங்கில் சிறுவர், சிறுமியர்களுக்கு ஓவியம் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டிகளும் நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.