இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தல் : விமான நிறுவன ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது

கோவை : இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்திய சம்பவத்தில் 2 விமான நிறுவன ஊழியர்கள் உள்பட 5 பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.

கோவை : இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்திய சம்பவத்தில் 2 விமான நிறுவன ஊழியர்கள் உள்பட 5 பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர். 

கொழும்புவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு ஸ்ரீலன்கன் ஏர்லைன்ஸ் யூ.எல்-193 என்ற விமானம் வந்திறங்கியது. விமானத்தைவிட்டு இறங்கி வந்த பயணிகளிடம் கோவை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சையத் அபுதாஹீர் என்ற பயணியிடமும், அவருக்கு உதவிய விமான ஊழியர்கள் மனோஜ், சதீஷ் ஆகியோரிடம் இருந்து சுமார் 1.6 கிலோ எடையுள்ள 24 கேரட் மதிப்புள்ள 16 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 55 லட்சமாகும். 

இதைத் தொடர்ந்து, விமான ஊழியர்களான மனோஜ், சதீஷ், பயணி சையத் மற்றும் இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய திருச்சியைச் சேர்ந்த டி. ராஜா மற்றும் அவரது ஓட்டுநரை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும், அதிகாரிகளின் விசாரணையில், இந்தக் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி பைனான்சியர் மிஷ்ரா எனத் தெரிய வந்தது. 

இதனிடையே, இந்த தங்கத்தை பெறுவதற்காக கோவை விமான நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் காத்திருந்த நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...