கோவையில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் அனைவரையும் விடுதலை செய்தால் தான் மண்டபத்திலிருந்து வெளியேறுவோம் என ஆண் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவிலும் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.

ஜாக்டோ ஜியோ சார்பில் நான்காவது நாளாக இன்று நடைபெற்றுவரும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை போலிசார் கோவை லட்சுமி மில் பகுதியில் உள்ள மீனாட்சி ஹாலிலும், அதேபோல கணபதி பகுதியில் உள்ள சிஎம் மண்டபத்திலும் வைத்திருந்தனர். இந்த நிலையில், இன்று மாலை சுமார் 6:30 மணி அளவில் போலீசார் அனைவரையும் மண்டபத்திலிருந்து வீட்டிற்கு கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் கலைந்து சென்றால் சங்கத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்வார்கள் என்பதை அறிந்த போராட்டக்காரர்கள் மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து இருந்தனர்.

இதில் மீனாட்சி ஹாலில் உள்ள 914 க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களும், அதேபோல சி எம் மண்டபத்தில் உள்ள 1382 உறுப்பினர்களும் விடிய விடிய மண்டபத்தில் இருந்த படி தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மண்டபத்திற்கு வெளியில் நின்றபடி நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். மேலும், இந்தப் பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பாலாஜி சரவணன் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறுப்பினர்களிடம் சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் போராட்டகாரர்கள் அனைவரையும் விடுதலை செய்தால் மட்டுமே நாங்கள் அனைவரும் மண்டபங்களை விட்டு வெளியேறும். இல்லையென்றால் இந்த மண்டபத்தை விட்டு உறுப்பினர்கள் யாரும் கலைய போவதில்லை என காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை, அனைத்து பள்ளி, கல்லூரிகளில் கொடியேற்றும் நிகழ்வுகள் இருக்கும் சூழலில் தற்போது வரை ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.