ஜாக்டோ - ஜியோ-- நள்ளிரவிலும் தொடரும் போராட்டம்

கோவையில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் அனைவரையும் விடுதலை செய்தால் தான் மண்டபத்திலிருந்து வெளியேறுவோம் என ஆண் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவிலும் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.

கோவையில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் அனைவரையும் விடுதலை செய்தால் தான் மண்டபத்திலிருந்து வெளியேறுவோம் என ஆண் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவிலும் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.

ஜாக்டோ ஜியோ சார்பில் நான்காவது நாளாக இன்று நடைபெற்றுவரும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை போலிசார் கோவை லட்சுமி மில் பகுதியில் உள்ள மீனாட்சி ஹாலிலும், அதேபோல கணபதி பகுதியில் உள்ள சிஎம் மண்டபத்திலும் வைத்திருந்தனர். இந்த நிலையில், இன்று மாலை சுமார் 6:30 மணி அளவில் போலீசார் அனைவரையும் மண்டபத்திலிருந்து வீட்டிற்கு கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் கலைந்து சென்றால் சங்கத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்வார்கள் என்பதை அறிந்த போராட்டக்காரர்கள் மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து இருந்தனர். 



இதில் மீனாட்சி ஹாலில் உள்ள 914 க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ  உறுப்பினர்களும், அதேபோல சி எம் மண்டபத்தில் உள்ள 1382  உறுப்பினர்களும் விடிய விடிய மண்டபத்தில் இருந்த படி தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் போராட்டக்காரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மண்டபத்திற்கு வெளியில் நின்றபடி நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். மேலும், இந்தப் பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பாலாஜி சரவணன்  போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறுப்பினர்களிடம் சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் போராட்டகாரர்கள் அனைவரையும் விடுதலை செய்தால் மட்டுமே நாங்கள் அனைவரும் மண்டபங்களை விட்டு வெளியேறும். இல்லையென்றால் இந்த மண்டபத்தை விட்டு உறுப்பினர்கள் யாரும் கலைய போவதில்லை என காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்தனர்.



இந்த நிலையில் இன்று காலை  குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை, அனைத்து பள்ளி, கல்லூரிகளில் கொடியேற்றும் நிகழ்வுகள் இருக்கும் சூழலில் தற்போது வரை ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...