திருப்பூர் : திருப்பூரில் 4 அஜித் ரசிகர்கள் பா.ஜ.க.,வில் இணைந்த நிகழ்வை, விளம்பர நோக்கில் 2,000 பேர் என தெரிவித்ததாகக் கூறி பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அஜித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கலைக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட தலைமை அஜித்குமார் ரசிகர்கள் நற்பணி இயக்கத்தின் தலைவர் பொன்.ராசுக்குட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- விஸ்வாசம் படத்தின் முதல்நாள் ரசிகர் காட்சிக்கான டிக்கெட் பிரச்சனையில் பா.ஜ.க. பிரமுகர் உதவிய காரணத்தினாலேயே, ஹரி அஜித் பா.ஜகவில் இணைந்தார். அன்றைய நிகழ்வில், 4 பேர் மட்டுமே பா.ஜ.க.வில் இணைந்தனர். ஆனால், 2,000 அஜித் ரசிகர்கள் இணைந்ததாக விளம்பரம் தேடும் நோக்கில், தமிழிசை சவுந்தரராஜன் அபாண்டமாக தெரிவித்துள்ளார்.

கட்சியை வளர்க்க ஆயிரம் வழிகள் உள்ள நிலையில், அஜித் பெயரை பயன்படுத்தியதற்கு அஜித் ரசிகர்கள் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க.,வில் இருந்து அழைப்பு வந்தாலும், அஜித் ரசிகர்கள் யாரும் செல்ல மாட்டார்கள், எனக் கூறினார்.