கோவையில் நாளை 70 வது குடியரசு தின விழா கொண்டாட்டம்; 1000 போலீசார் பாதுகாப்பு

கோவை: நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள 70 வது குடியரசு தின விழாவையொட்டி, கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை: நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள 70 வது குடியரசு தின விழாவையொட்டி, கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வ.உ.சி மைதானத்தில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.

குடியரசு தின விழா நடக்க உள்ள வ.உ.சி மைதானம் மற்றும் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிகை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

கோவை மாநகரில், மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையில், துணை/கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள் டாக்டர். பாலாஜி சரவணன், பெருமாள், சுஜித்குமார் உதவி ஆணையர்கள், உதவி ஆய்வாளர்கள் என ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாநகர பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...