கோவை: நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள 70 வது குடியரசு தின விழாவையொட்டி, கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வ.உ.சி மைதானத்தில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.
குடியரசு தின விழா நடக்க உள்ள வ.உ.சி மைதானம் மற்றும் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிகை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோவை மாநகரில், மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையில், துணை/கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள் டாக்டர். பாலாஜி சரவணன், பெருமாள், சுஜித்குமார் உதவி ஆணையர்கள், உதவி ஆய்வாளர்கள் என ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாநகர பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.