அருவங்காடு தொழிற்சாலை தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் : உற்பத்தி பாதிப்பு

நீலகிரி : பாதுகாப்புத் துறையில் தனியார் முதலீட்டிற்கு அளிக்கப்பட்ட அனுமதியைக் கண்டித்து நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி : பாதுகாப்புத் துறையில் தனியார் முதலீட்டிற்கு அளிக்கப்பட்ட அனுமதியைக் கண்டித்து நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 1,800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில், 1,500 பேர் நிரந்தர தொழிலாளர்கள் ஆவர். இந்த நிலையில், பாதுகாப்புத்துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதைக் கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் நேற்று முதல் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையைச் சேர்ந்த நிரந்தர தொழிலாளர்கள் நேற்று முதல் 3 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். 2-வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிகாரிகளைத் தவிர மற்ற அனைத்துப் பிரிவு தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், உற்பத்தி முழுமையாகப் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தப் போராட்டம் காரணமாக, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...