கோவை வணிக மையங்களில் மாநகராட்சி சார்பில் நவீன குப்பைத் தொட்டி அறிமுகம்

கோவை : கோவையில் உள்ள பிரபல வணிக மையங்களில் மாநகராட்சி சார்பில் நவீன குப்பைத் தொட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


கோவை : கோவையில் உள்ள பிரபல வணிக மையங்களில் மாநகராட்சி சார்பில் நவீன குப்பைத் தொட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

பொதுமக்கள் வீதிகளை அசுத்தம் செய்வதை தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையைக் கோவை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

ஈரப்பதமான, ஈரப்பதம் இல்லாத குப்பைகளை பிரித்தெடுக்கும் விதமாக இரண்டு பிரிவுகளாகக் கொண்டுள்ள இந்த நவீனக் குப்பைத் தொட்டிகள், மாநகரில் உள்ள பிரபலமான வணிக மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நவீன குப்பைத் தொட்டி ஒன்றின் விலை சுமார் ரூ. 8,500 ஆகும்.



கோவை மாநகராட்சியின் இந்த நடவடிக்கையானது, குப்பைக் கழிவுகளை பிரித்தெடுக்க கடைக்காரர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும், இந்தக் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்களே வந்து எடுத்துச் செல்வார்கள். 



இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "கோவை மாநகரில் சுமார் 100 டன் எடையளவு குப்பைகளை உருவாக்கும் வணிக மையங்களில், இந்த நவீன குப்பைத் தொட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒப்பணக்கார வீதி, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, என்.எஸ்.ஆர். ரோடு மற்றும் பிக் பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. நாளடைவில், இந்த நவீன குப்பைத் தொட்டிகள், மேலும் பல இடங்களில் விரிவுபடுத்தப்படும்," என்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...