உதகை பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

நீலகிரி : தேசிய பேரிடர் மேலாண்மை தினத்தை முன்னிட்டு உதகை நிர்மலா மெட்ரிகுலேசன் பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நீலகிரி : தேசிய பேரிடர் மேலாண்மை தினத்தை முன்னிட்டு உதகை நிர்மலா மெட்ரிகுலேசன் பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், ஆண்டு தோறும் ஜனவரி 21 -ம் தேதி பள்ளி மாணவர்களிடம் தீ விபத்து மீட்பு பணி குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இன்று உதகை, பிங்கர் போஸ்ட் நிர்மலா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தீ விபத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, முதலுதவி அளித்தல் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. 



இதையடுத்து, தீயணைப்பு நிர்வாக துறையினர் 10 குழுக்களாகப் பிரித்து, செய்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு படை, தீ விபத்து ஒலிபெருக்கி குழு, பாதுகாப்பு படை, முதலுதவி குழு, வாகன ஏற்பாடு உள்ளிட்ட பயிற்சியில் ஈடுபடுத்தினர். குறிப்பாக, வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களில் ஏற்படும் எரிவாயு கசிவின் போது நாம் அதை எப்படி எதிர்கொண்டு அணைக்க வேண்டும் என்ற செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், விபத்தின் போது காயமடைந்தவர்களை எவ்வாறு அடையாளம் காணுவது என்பன குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்களும் பயிற்சியில் பங்கேற்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...