திருப்பூர் : திருப்பூரில் போலி மது மற்றும் கள்ள சாராயத்திற்கு எதிரான நடைபெற்ற கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்ட மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைச் சார்பில் போலி மதுபானங்களைத் தவிர்ப்பது மற்றும் கள்ளச்சாராயத்தை ஒழிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூர் குமரன் கல்லூரி, எல்.ஆர்.ஜி கல்லூரி மற்றும் அரசு செவிலியர் கல்லூரி மாணவிகள் இணைந்து பேரணி நடத்தினர். இதனை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, பேரணியில் போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பிய படி, கள்ளசாரயத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இந்த பேரணி தொடர்ந்தது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, மாநகர காவல் ஆணையர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும், 100 -க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.