கோடநாடு கொலை வழக்கு : சயான், மனோஜ் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு

நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளான சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளான சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ், சேலத்தில் அதே மாதம் 28-ம் (ஏப்ரல் 28) தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். 

இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் இரண்டாம் குற்றவாளியான சயான், மனைவி மற்றும் குழந்தையுடன் கோவையில் இருந்து காரில் சென்ற போது மறுநாளே விபத்தில் சிக்கினார். இதில், சயானின் மனைவி விணுபிரியா மற்றும் குழந்தை நீத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கு விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் நடந்தது. பின்னர், உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். 

இதனிடையே, சயான் மற்றும் மனோஜ் தெஹல்கா பத்திரிகையாளர் சாமுவேலுடன் சேர்ந்து கோடநாடு விவாகரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புள்ளதாகத் தெரிவித்ததை அடுத்து, சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் 13-ம் தேதி டெல்லியில் கைது செய்து, இருவரையும் இரவோடு இரவாக சென்னை அழைத்து வந்தனர். நள்ளிரவே, இருவரும் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர்களை நீதிபதி விடுவித்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் கேரளாவிற்கு சென்றனர். 

இந்த நிலையில், சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அரசு வழக்கறிஞர் நந்தகுமார் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...