பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார் எச்.ஐ.வி., ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி

பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார் எச்.ஐ.வி., ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி


சாத்தூர் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி., ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த 24 வயது நிரம்பிய கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.,வி., பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டது. இந்த விவகாரம் மாநில அளவில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவருக்கு இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனையில், சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதனிடையே, இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பெண்ணின் குடும்பத்தினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

மேலும், எச்.ஐ.வி ரத்தம் கொடுத்த இளைஞர் குற்றவுணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...