பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்த சமுதாய ரேடியோ ரத்தினவானியுடன் கரம் கோர்க்கிறது யுனிசெப்

கோவை : பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தவும், குழந்தைகள் திருமணத்தை தடுக்கவும் யுனிசெப்புடன் இணைந்து பணியாற்ற சமுதாய ரேடியோ ரத்தினவானி தேர்வாகியுள்ளது.

கோவை : பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தவும், குழந்தைகள் திருமணத்தை தடுக்கவும் யுனிசெப்புடன் இணைந்து பணியாற்ற சமுதாய ரேடியோ ரத்தினவானி தேர்வாகியுள்ளது. 

இந்தியா முழுவதும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்), பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தவும், குழந்தைகள் திருமணத்தை தடுக்கவும் 16 சமுதாய வானொலிகளை (கம்யூனிட்டி ரேடியோ) தேர்ந்தெடுத்துள்ளது. சமூகத்தின் நலனுக்காக பாடுபடும் சமுதாய ரேடியோக்களை அதன் அர்ப்பணிப்பையும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் பொறுத்து தேர்ந்தெடுக்கின்றனர். 

அதில், முதல் முறையாகக் கோவையை சேர்ந்த ரத்தினம் நிறுவன குழுமத்தின் சமுதாய ரேடியோ ரத்தினவானி 90.8 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரத்தினவானி ரேடியோவின் தலைவர் முகேஷ் மோகன் குமார் கூறும் போது, அனைத்துச் சமுதாய ரேடியோ தலைவர்களுக்கும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாகாராஷ்டிராவில் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 -ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. 

அந்த பயிற்சி பட்டறையில், குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையிலான மெட்டீரியல்ஸ், குழந்தை திருமணத்தை ஒழிக்கும் முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. இதையடுத்து, இந்த பிரச்சினைகள் தொடர்பாக நிகழ்ச்சிகள் சமுதாய ரேடியோக்களில் கொடுப்பது குறித்தும் கற்று கொடுக்கப்படும் என தெரிகிறது, என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...