திருப்பூர் : பேட்ட திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடி ரசிகர்கள் மகிழ்ந்தனர்.
திருப்பூர் : பேட்ட திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடி ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் பகுதியில் ரஜினி மக்கள் மன்றம் அமைந்துள்ளது. இதன் சார்பில் ரஜினியின் 69 -வது பிறந்தநாளை நாளை முன்னிட்டும் பேட்ட படத்தின் வெற்றியை முன்னிட்டும் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் வகையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் 69 பெண்கள் கலந்துகொண்டு 69 பானைகளில் பொங்கலிட்டனர்.

இந்த பொங்கல் விழாவினை, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்ரமணியம் தொடங்கி வைத்தார். இதையடுத்து, பேசிய அவர், ரஜினியின் பேட்ட திரைப்படம் சிறந்த வெற்றி பெற்றுள்ளது. பாட்ஷா திரைப்படத்திற்குப் பிறகு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது, என்றார்.

இந்த விழாவில், பொங்கல் வைப்பதற்குத் தேவையான பாத்திரங்கள், கரும்பு உள்ளிட்ட பொருட்களை ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் இலவசமாக வழங்கினர். அதேபோல, திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியிலும், மும்மதத்தினரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வீதியில் கோலமிட்டும் பொங்கல் வைத்தும் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.