நீலகிரி : கோத்தகிரியில் பழங்குடிகளான கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் பண்டிகை கொண்டாட்டத்தில் கோத்தர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் ஆதிவாசி பழங்குடியின கோத்தர் இன மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவிலில் கம்ப்பட்டராயர் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையில் ஏராளமான கோத்தர் இன மக்கள் கலந்து கொண்டு தங்களது குல தெய்வத்தை வழிபட்டு பாரம்பரிய நடனமாடி மகிழ்வர்.
இதையடுத்து, கோத்தகிரியிலிருந்து குன்னுார் செல்லும் சாலையில் அமைந்துள்ள கோத்தர் இன மக்கள் வசிக்கும் கிராமமான புது கோத்தகிரியில் இந்த ஆண்டிற்கான பண்டிகை நடைபெற்றது. பிறை கழித்தல் நிகழ்ச்சியுடன் கடந்த 4 -ம் தேதி தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளாக நீலகிரி முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக புது கோத்தகிரி மக்கள் அனைவரும் தங்களது கலாச்சார பாரம்பரிய உடையணிந்து கோத்தகிரியில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தங்களது குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவிலுக்கு வந்தனர்.

அங்கு ஊர் பூசாரிகள் 4 பேர் தலைமையில் ஆதி கோவிலின் நடை திறக்கப்பட்டு தீபம் ஏற்றி, கம்ப்பட்டராயர் சாமியை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து கோத்தர் இன மக்கள் அனைவரும் கோவிலின் முன்புறம் உள்ள நடுகல்லைச் சுற்றி தங்களது பாரம்பரிய இசைக் கருவிகள் முழங்கக் கலாச்சார நடனமாடிக் கொண்டாடினர்.