பாரம்பரிய இசையுடன் கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்

நீலகிரி : கோத்தகிரியில் பழங்குடிகளான கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் பண்டிகை கொண்டாட்டத்தில் கோத்தர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.

நீலகிரி : கோத்தகிரியில் பழங்குடிகளான கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் பண்டிகை கொண்டாட்டத்தில் கோத்தர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். 



நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் ஆதிவாசி பழங்குடியின கோத்தர் இன மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவிலில் கம்ப்பட்டராயர் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையில் ஏராளமான கோத்தர் இன மக்கள் கலந்து கொண்டு தங்களது குல தெய்வத்தை வழிபட்டு பாரம்பரிய நடனமாடி மகிழ்வர். 

இதையடுத்து, கோத்தகிரியிலிருந்து குன்னுார் செல்லும் சாலையில் அமைந்துள்ள கோத்தர் இன மக்கள் வசிக்கும் கிராமமான புது கோத்தகிரியில் இந்த ஆண்டிற்கான பண்டிகை நடைபெற்றது. பிறை கழித்தல் நிகழ்ச்சியுடன் கடந்த 4 -ம் தேதி தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளாக நீலகிரி முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக புது கோத்தகிரி மக்கள் அனைவரும் தங்களது கலாச்சார பாரம்பரிய உடையணிந்து கோத்தகிரியில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தங்களது குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவிலுக்கு வந்தனர். 



அங்கு ஊர் பூசாரிகள் 4 பேர் தலைமையில் ஆதி கோவிலின் நடை ‌திறக்கப்பட்டு தீபம் ஏற்றி, கம்ப்பட்டராயர் சாமியை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து கோத்தர் இன மக்கள் அனைவரும் கோவிலின் முன்புறம் உள்ள நடுகல்லைச் சுற்றி தங்களது பாரம்பரிய இசைக் கருவிகள் முழங்கக் கலாச்சார நடனமாடிக் கொண்டாடினர்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...