கோவை : ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த புகாரில் அரசு விடுதியின் பெண் காப்பாளர் கைது செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை, ராமநாதபுரம் சுப்பிரமணிய தேவர் வீதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். இவரது உறவினர் சூலூர் கலைமகள் நகரைச் சேர்ந்த கருப்பசாமி. இவர் அங்குள்ள விமானப்படையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி.
சின்ன தடாகத்தில் உள்ள அரசு விடுதியில் காப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கருப்பசாமியும், ராஜேஸ்வரியும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜமாணிக்கத்திடம் கடனாக ரூ.13 லட்சம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் பணத்தைத் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர்.இதனால், ராஜமாணிக்கம் கருப்பசாமியின் வீட்டுக்கே சென்று பணத்தைத் திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து, ராஜேஸ்வரி தனது தம்பி சசிக்குமாருடன் சேர்ந்து அவரை தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராஜமாணிக்கம் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மூவரின் மீதும் வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார், ராஜேஸ்வரியை கைது செய்து கோவை மத்திய சிறையிலடைத்தனர். தலைமறைவாக உள்ள கருப்பசாமி மற்றும் சசிக்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.