நீலகிரி : குன்னூர் அருகே சொகதொரை கிராமத்திலுள்ள சிவன் கோயிலில் நேற்று இரவு கரடி ஒன்று பல மணி நேரம் உலாவந்து சென்றிருப்பது அங்கு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
நீலகிரி : குன்னூர் அருகே சொகதொரை கிராமத்திலுள்ள சிவன் கோயிலில் நேற்று இரவு கரடி ஒன்று பல மணி நேரம் உலாவந்து சென்றிருப்பது அங்கு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே சொகதொரையில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வர். நேற்றிரவு பூசாரி கோயில் நடையை சாத்தி சென்ற பிறகு, கோயிலுக்குள் நுழைந்த கரடி அப்பகுதியில் சிலமணி நேரம் சுற்றித்திரிந்துள்ளது. அதன் பின்பு, பசியில் பூஜை செய்து வைத்திருந்த பழங்கள் மற்றும் சுண்டல் தேங்காய் உள்ளிட்டவற்றை உண்டுள்ளது.

இதையடுத்து, இன்று மாலை பூஜைக்காக கோவிலுக்கு வந்த பூசாரி, கோயிலில் இருந்த பூஜை பொருட்கள் கலைந்திருப்பது கண்டு அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளார். அப்போது சிசிடிவி கேமராவில் கரடி ஒன்று உள்ளே வந்து சாமிக்கு படைக்கப்பட்டிருந்த பொருட்களை உண்டு விட்டு சென்றது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள இந்தக் கோவிலுக்குள் கரடி ஒன்று வந்திருப்பது அந்த பகுதி மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது.