பொங்கல் பண்டிகையினால் ஊத்துக்குளி வெண்ணெய் விற்பனையில் முன்னேற்றம் இல்லை : உற்பத்தியாளர்கள் ஏமாற்றம்

திருப்பூர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனை அதிகரிக்கும் என்றிருந்த நிலையில் ஊத்துக்குளி வெண்ணெய் விற்பனையில் ஏற்பட்ட சரிவால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

திருப்பூர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனை அதிகரிக்கும் என்றிருந்த நிலையில் ஊத்துக்குளி வெண்ணெய் விற்பனையில் ஏற்பட்ட சரிவால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 



திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்திக்குப் பிரசித்தி பெற்ற இடமாக இருந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் வெண்ணெய் உற்பத்தி செய்து மும்பை, டெல்லி கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வந்தனர். தற்போது வடமாநிலங்களில் வெண்ணெய் உற்பத்தியானது அதிகரித்துள்ள நிலையில், வடமாநிலங்களுக்கான ஏற்றுமதி தடைபட்டுள்ளது. 



இதையடுத்து, ஊத்துக்குளியில் இருந்து கேரளாவிற்கு மட்டுமே வெண்ணெய்யானது ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், வடமாநிலங்களில் இருந்து தற்போது குறைந்த விலையில் வெண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் ஊத்துக்குளி வெண்ணெய் விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது. இதனால் தங்கள் பணி வாய்ப்பை இழந்து உள்ளதாகவும், ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின்னர் தங்களது விற்பனையானது மேலும், சரிவடைந்து உள்ளதாகவும் தெரிவித்தனர். 



இதனிடையே, 15 கிலோ கொண்ட வெண்ணெய் டின் ஒன்றிற்கு ரூ.700 ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவதாகவும், பொங்கல் பண்டிகைக்கு விற்பனை அதிகரிக்கும் என்றிருந்த நிலையில் தொடர்ந்து விற்பனையானது மந்தமாகவே உள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பண்டிகை காலங்களில் நாள் ஒன்றுக்கு 100 டின்கள் விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 30 டின்கள் அளவிலேயே விற்பனை உள்ளது. இதனால், குறைந்த அளவில் உற்பத்தி செய்யும் வெண்ணெய் கூட தேக்கமடைகிறது. மேலும், உற்பத்தியானது குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக உற்பத்தியாளர்கள் வேதனைத் தெரிவித்தனர்.



இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும் போது, தங்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்தது வெண்ணெய் உற்பத்தி. தற்பொழுது விற்பனை மந்தம் அடைந்துள்ளதால், வேலையின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் 4 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. வாரம்தோறும் பணி வழங்கப்பட்டாலும் பாதி நேரம் மட்டுமே வேலை பார்க்கவேண்டியுள்ளது. இதனால், ஊதியம் மிகக் குறைந்த அளவே வருவகிறது. பொங்கல் பண்டிகையான இந்த நேரத்தில் வேலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக வேதனைத் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...