நீலகிரி : பந்தலுார் அருகே, சுருளிமூலா பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் மூங்கில் பாலத்திற்கு பதில் நிரந்தர பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுருளிமூலா பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு செல்ல பாட்டவயல்-கல்பறா-அம்பலமூலா சாலையிலிருந்து பிரிந்து செல்லும் மண் சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலைக்கு செல்ல அங்குள்ள ஆற்றைக் கடக்க வேண்டும்.
ஆனால், ஆற்றைக் கடக்க நிரந்தர பாலம் இல்லாத நிலையில், தற்காலிக மூங்கில் பாலம் அமைத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, மூங்கில் வெட்ட முடியாத நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பாலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொங்கு பாலமாக உள்ள இந்த பாலத்தில் தட்டு, தடுமாறி நடந்து செல்லும் நிலை உள்ளது.
இதனால், சிறுவர்கள், வயோதிகர், நிலை தடுமாறி விழும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறுகின்றன. இந்த பாலத்தால் கோடை காலத்தில் பெரிய பிரச்னை இல்லாவிட்டாலும், மழைக் காலங்களில் பாதிப்பு அதிகரிக்கிறது. எனவே, உடைந்து விழும் நிலையில் உள்ள இந்த பாலத்திற்கு பதில் நிரந்தர பாலம் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.