நீலகிரி : மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சேரிங் கிராஸ் முதல் கேசினோ ஜங்சன் வரையுள்ள வர்த்தக சாலையை ஹேப்பி சாலையாக தொடங்கி வைத்ததோடு, பள்ளி மாணவர்களுடன், விளையாடியும் நடனமாடியும் மகிழ்ந்தார்.

நீலகிரிமாவட்டம் சுற்றுலா மாவட்டம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர். இன்னும் 2 மாதங்களில் கோடை சீசன் தொடங்கிவிடும். இதையடுத்து, உதகைக்கு லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிய உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சேரிங் கிராஸ் முதல் கேசினோ ஜங்சன் வரையுள்ள வர்த்தக சாலை, மாதந்தோறும் சனிக்கிழமைகளில் ஹேப்பி சாலையாக மாற்றப்பட்டு அன்று ஒரு நாள் மட்டும் எவ்வித வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹேப்பி சாலையில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சிப்படுத்தப் பாண்டி, சதுரங்க விளையாட்டு, கேரம், பல்லாங்குழியாட்டம், வாலிபால் போன்றவற்றை விளையாடி மகிழும் வகையில் சூழல் காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்டது. இன்று அதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடக்கி வைத்து பள்ளி மாணவர்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.